பெரம்பலூர் மாவட்ட மதுபான கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் (CITU), டிரான்ஸ்போர்ட் ஓட்டுநர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி போனஸ் கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஆண்டு போனஸ் தீபாவளி பண்டிகை 10 நாட்களுக்கு முன்பாக வழங்கவும், ஸ்கேனிங் செய்யும் வேலைக்கு கூலி வழங்கவும், மதுபான பெட்டிக்கு ரூ.3.50 என ஒரே மாதிரி ஏற்றுக் கூலி என்பதை டெண்டர் படிவத்திலேயே உத்திரவாதப்படுத்து ,
HL என்ற பெயரில் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலியில் மாதாமாதம் பணம் கட்ட சொல்வதை தடுத்து நிறுத்திடுக, குடோன்களில் அடிப்படை வசதி செய்து கொடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.