பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக வாசலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

2021 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் கருணை ஓய்வூதியம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது 5 ஆண்டுகளைக் கடந்த நிலையில் ஓய்வு பெற்ற பணியாளர்களின் நலம் கருதி 5 ஆயிரம் ரூபாய் அளவில் இதனை உயர்த்தி வழங்கிட வேண்டும் 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேறாவிட்டால் நாளை முதல் மாவட்டத்தில் உள்ள தொடக்கக் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவுத் துறையை சேர்ந்த இடங்களில் பணியாற்ற போவதில்லை என தெரிவித்தனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்றg ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ராமச்சந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் இச்சங்கத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.