• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாணவர்களே உங்கள் சமூக வலைதள அக்கவுண்ட்களை மூடுங்கள்..!

Byமதி

Dec 14, 2021

மாணவர்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுக்க சமூக வலைதளங்களை மூடும்படி, திருப்பூர் கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் சமூக வலைதளங்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கல்வி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, கூடா நட்பு, தெரியாதவர்களுடன் தொடர்பு என சிறிய வயதிலேயே மாணவர் வாழ்க்கை சீரழிய துவங்குகிறது. இதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களால் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரிக்கிறது.

இதன் காரணமாக, திருப்பூர் பள்ளி கல்வித் துறை மாணவர்கள் சமூக வலைதளங்களை மூடும்படி அறிவுறுத்தி உள்ளது.