மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் எட்டு பேர் அதிமுக சார்பில் ஆறு பேர் சுயேச்சைகள் நாண்கு என வெற்றி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் தேர்தலுக்கான போட்டியில் பெரும்பான்மை இல்லாத திமுக சுயேட்சையாக போட்டியிட்ட ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சத்திய பிரகாஷை திமுகவில் இணைத்து பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அப்போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி எட்டாவது வார்டு கவுன்சிலர் மருது பாண்டியன் 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் ஆகியோரிடமும் திமுக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் திமுகவில் இணைத்து திமுகவின் கவுன்சிலர் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியது கடந்த மூன்று ஆண்டுகளாக 12 கவுன்சிலர்கள் உடன் பெரும்பான்மை பெற்று திமுக சோழவந்தான் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பணி நியமன குழு போன்ற அனைத்து பதவிகளிலும் திமுகவினரை நியமித்து செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு திமுகவில் இணைந்த 1வது வார்டு கவுன்சிலர் மற்றும் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டாவது வார்டு கவுன்சிலர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 16 வது வார்டு கவுன்சிலர் ஆகிய நான்கு பேர் பேரூராட்சிக்கு எதிராக பேரூராட்சி கூட்டம் நடைபெறும் சமயங்களில் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இடையூறு செய்து வந்ததாக தெரிகிறது இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைமை திமுகவிலிருந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் கவுன்சிலர்களை சமாளிக்க மற்ற கவுன்சிலர்களிடம் பேசி பேரூராட்சி தீர்மானங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றி வந்தது.
இதில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நாலாவது வார்டு கவுன்சிலர் சிவா பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்து ஆதரவு தெரிவித்து பேரூராட்சி கூட்டங்களில் பங்கெடுத்து தீர்மானங்களை ஆதரித்து வந்தார்கள்.
இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 30ம் தேதி வழக்கம் போல் பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 11:00 மணிக்கு அனைத்து கவுன்சிலர் களும் பேரூராட்சி கூட்டத்திற்கு வந்திருந்த நிலையில் பேரூராட்சியின் திமுக கவுன்சிலர்கள் ஒன்னாவது வார்டு ஈஸ்வரி இரண்டாவது வார்டு முத்துச்செல்வி 14வது வார்டு நிஷா ஆகியோர் பேரூராட்சிக்கு எதிராக பேரூராட்சி அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பேரூராட்சி சார்பில் தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை எனவும் தங்கள் வார்டுகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை என கூறி தர்ணாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மற்ற மற்ற கவுன்சிலர்களின் ஆதரவை திமுக சார்பில் கோரப்பட்டு இருந்த நிலையில்,
அதிமுக ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் ஏற்பாட்டில் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் அப்போது 14வது வார்டு கவுன்சிலர் நிஷாவின் கணவர் கவுதமராஜாமற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சில நிமிடங்களில் கைகலப்பாக மாறியது உடனே செயல் அலுவலர் செல்வகுமார் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் வந்து இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில் திமுக கவுன்சிலராக இருந்து கொண்டு தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக கவுன்சிலர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இதுகுறித்து அங்கிருந்த திமுகவினர் கூறுகையில் இதுகுறித்து விரைவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்து கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த போவதாக கூறினர்.