புதுக்கோட்டை மாவட்டம் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினை
மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினை, மாண்புமிகு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.09.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளின் நலனிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட பிரிவின் சார்பில், 2025-26 அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது.
இப்போட்டிகளானது, 13 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கும், 15 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கும், 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. இந்த மிதிவண்டி போட்டிகளில் 300 க்கும் மேற்பட்ட பள்ளி விளையாட்டு வீரர்/ வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த மிதிவண்டி போட்டிகளில் ஆண்கள் மாவட்ட விளையாட்டரங்க வளாகத்திலிருந்து துவங்கி ஜெ.ஜெ. கல்லூரி வரையிலும், சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடையும் வகையிலும், பெண்கள் மாவட்ட விளையாட்டரங்க வளாகத்திலிருந்து துவங்கி வெள்ளாற்று பாலம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடையும் வகையிலும், நடத்தப்படுகிறது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்/ வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக தலா ரூ.5000/- மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.3000/- மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.2000/- மும், நான்கு முதல் பத்தாமிடம் வரை உள்ளவர்களுக்கு ரூ.250/-ம் பரிசாக வழங்கப்படுகிறது.
எனவே, தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று உயர்ந்த நிலையினை அடைந்திட வேண்டும் எனவும் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா அவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.து.செந்தில்குமார், புதுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி.மு.செந்தில்நாயகி, மாவட்ட இளைஞர் அலுவலர் திரு.ஜோயல் பிரபாகர், மாவட்ட மிதிவண்டி சங்க செயலர் திரு.அசோக், பயிற்றுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.