புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு புதுக்கோட்டை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் நாற்பதாவது நாள் போராட்டமாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வு கால பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஏழாவது ஊதிய குழு அடிப்படையில் உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், ஒப்புக்கொண்டபடி 15 வது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணியில் உள்ள ஊழியர்கள் பெரும் அகவிலைப்படியை வழங்க வேண்டும்,

மேலும் தேர்தல் வாக்குறுதியின் படி அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு புதுக்கோட்டை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் தொடர்ந்து நாற்பதாவது நாட்கள் போராட்டமாக பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.