• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பள்ளி வாகனம் மோதி சென்ட்ரிங் வேலையாளர் பலி!!

ByKalamegam Viswanathan

Sep 25, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் ரோடு ஜே ஜே நகரை சேர்ந்தவர் போஸ் இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார்.

இவர் நேற்று மாலை பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது எதிரே வந்த நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விபத்து குறித்துவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.