புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் போதை பொருள் எதிர்ப்பு குழுவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையும் அறந்தாங்கி கோட்டக்களால் அலுவலரும் இணைந்து நடத்திய போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

பேரணி தூங்குவதற்கு முன்பு போதை பொருள் எதிராக அனைவரும் உறுதிமொழி ஏற்றினர்.பின்னர் பேரணி ஆவுடையார் கோவில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகை ஏந்தி கல்லூரி மாணவ மாணவிகள் சுற்றி வந்து போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.நிகழ்ச்சியில் வட்டாட்சியர்,கோட்ட கலால் அலுவலர் மற்றும் கல்லூரி மாணவர் மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.