மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் SIP அகாடமியின் 10ம் ஆண்டை கொண்டாடும் வகையிலும் SIP அகாடமியின் நிர்வாக இயக்குநர் தினேஷ்விக்டர் அறிவுறுத்தலின் படி மதுரை வண்டியூர் சாலையில் உள்ள அண்ணாநகர் கிளையின் சார்பாக மாணவ மாணவிகளின் கணித திறனை மேம்படுத்தும் வகையில் அபாகஸ் என்று சொல்லக் கூடிய தேசிய அளவிலான கணித திறனாய்வு போட்டியின் இரண்டாம் சுற்று நடைபெற்றது.

இதில் மதுரையில் உள்ள பிரபல பள்ளிகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் தென்மண்டல தலைமை அதிகாரி சுதர்சனன் அபாகஸ் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். நான்கு சுற்றுகளாக நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் சாதனையாளர்கள் இஸ்ரோவிற்கு நேரில் அழைத்து செல்லப்படு விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளை கண்டு களிக்க உள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அண்ணாநகர் கிளை நிர்வாக அதிகாரி புவனேஸ்வரி அமுதன் சிறப்பாக செய்திருந்தார்.