புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மன்னர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியல் படிப்பு படித்து வரும் என்சிசி மாணவன் ஹரிஹரன் கடந்த செப்டம்பர் 2ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய என்சிசி பயிற்சி மையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடை தாண்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தும் சாதனை படைத்தார்.

தமிழ்நாட்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த ஹரிஹரனுக்கு இன்று கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி என்சிசி அலுவலர் கேப்டன் பகுத்தறிவாளன் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் என்சிசி மாணவர் மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.