கன்னியாகுமரி, திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் கீழும், பாண்டிய மன்னரின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பகுதி. கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் கொண்டுள்ள பகவதியம்மன் கோயில் ஒரு சிறிய கோபுரத்தை கொண்டுள்ளது.

இந்த பகுதியின், ஆட்சி, அதிகாரம் பெற்றிருந்த மன்னர்கள். இந்தியாவின் தென் கோடியில் கொண்டுள்ள, அருள்மிகு பகவதியம்மன் கோவிலில். பக்தர்கள் தலையை உயர்த்தி கோபுரம் தரிசனத்தை காண வேண்டும் என்ற ஆவலில் கோபுரம் அமைக்க பல்வேறு முறை முயற்சி செய்தும், இரண்டு மா மன்னர்களாலும்,
குமரி பகவதியம்மன் கோவிலுக்கு கோபுரம் கட்ட முடியவில்லை.

மன்னர் ஆட்சி போய் மக்கள் ஆட்சி மலர்ந்த பின். தமிழகத்தில் இந்துக் கோவில்கள் அனைத்தும். அரசின் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு. எந்தெந்த கோவில்களுக்கு என்ன பணிகள் அவசியப்படுகிறதோ, அதனை கோவில் சார்பில் ஒரு பகுதியாக இருந்தாலும்,பக்த்தர்களின் நன்கொடை மூலம் திருக்கோயில் திருப்பணிகள் நடக்கிறது.
திமுகவின் ஆட்சியில் தான் பல காலம் கடந்து கும்பாபிஷேகம் நடக்காத கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திவருகின்றனர்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு 9_ மாடங்களில் கோபுரம் அமைப்பது என்ற உறுதியுடன். 24_க்கு மாதங்களுக்கு முன் குமரி மாவட்ட அறங்காவலர் குழு வின் தலைவராக பொறுப்பேற்ற பிரபா G. ராமகிருஷ்ணன் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு, அறங்காவலர்கள் குழுவின் தலைவராக பணியை தொடங்கிய போது எடுத்து சங்கல்ப்பமான . கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் அமைக்கும் பணிக்கான முதல் அணியாக. கேரள மாநிலத்தின் நம்பூதிரிகளை கொண்டு ‘பிரசன்னம்’ பார்த்ததில், கோபுரம் கட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற பதில் கிடைத்த நிலையில்.

குமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் கட்டுவதற்கான முழுத்தொகையான
ரூ.20 கோடியில் திட்டமிட்டு. கோபுரத்தின் வடிவம்,9,மாடங்களை, கொண்டதாகவும்
உயரம், நீளம் என பொறியாளர்களை கொண்டு வரையப்படம் தயாரிப்பு பணி நடந்துள்ளது.
குமரியில் சிதலமடைந்திருந்த சிரிய,பெரிய கோவில்களின் பராமரிப்பு பணிகள் தொடர்பான பணியில். 20_ மாதங்கள் எப்படி ஓடியது என நினைக்கும் முன்பே
அறங்காவலர்கள் குழு அதன் காலம் முடிந்த நிலையில். கலைக்கப்பட்டது.
பிரபா G. ராமகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் காலத்தில் பல காலம் பராமரிப்பு இல்லாது இருந்த கோவில்கள் சீரமைக்க முடிந்தது இறைவனின் பேர் அருள் என கருதி இருந்து விடாது.
குமரி பகவதியம்மனை வணங்கி கோபுரம் வேலைக்கான தொடர்ந்த பணி இன்று வெற்றி என்ற நிலையை எட்டியுள்ளது.

திருக்கோபுரம் கட்ட செங்கல்களை அடுக்குவது போன்று, அறநிலையத்துறை அலுவலகத்தில் கோப்புகள் நகர்ந்து உரிய இடத்தை எட்டி விட்டதால்.
புனித ஜார்ஜ் கோட்டையில் துறை சார்ந்த அலுவலகத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் கட்டுவதற்கான பணி ஆணை கையெழுத்து ஆகிவிட்டது என்ற செய்தி ஒரு தென்றல் போல் குமரியில் பரவும் நிலையில்.
கோபுரத்தின் திருப்பணியை தொடங்க முதல் நன்கொடை தொகை ரூ.5. கோடியை
பிரபா G. ராமகிருஷ்ணன் கொடுத்து.குமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் பணித் தொடக்கத்திற்கு பின் கோபுரம் உயர,உயர கோபுரத்தின் கட்டுமான செலவு மொத்த தொகையான ரூ. 20_கோடியையும் பிரபா G. ராமகிருஷ்ணன் அவரது உழைப்பில் ஈட்டிய பணத்தைக் குமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் செலவை முழுவதுமாக
பிரபா.G.ராமகிருஷ்ணனே,ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதுதான் கன்னியாகுமரியிலும், குமரி மாவட்டம் முழுவதும் கடல்அலை போல் அடிக்கும் நிலையில்
குமரி மாவட்டம் மக்கள் மத்தியில் உலவும் கருத்து.

திருவிதாங்கூர் மன்னர், பாண்டிய மன்னர்களின் குமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் என்ற முயற்சி கை கூடாத நிலையில். பிரபா G.. ராமகிருஷ்ணன் என்ற தனி மனிதனின் முயற்சி வெற்றி என்பது. அந்த ஏக இறைவனின் அருள் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது.