• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலையை வெளுத்தெடுத்த திமுக எம்.பி.!

பாஜகவினர் குறை கூறுவதை மட்டுமே ஒரு தொழிலாக வைத்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் சாடியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து அல்லது முதல்வரை விமர்சித்தாலும் சிறைச்சாலைதான். பாஜக ஆட்சி நடத்த கூடிய அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இவற்றை எதிர்த்து அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.


சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பாஜகவினர் முதலில் பதில் சொல்லட்டும். 17 மாநிலங்களில் எவ்வாறு அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்? சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியும் வருவாய் துறையினரை வைத்து மிரட்டியும் சிபிஐ வைத்து மிரட்டியும்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

பாஜக குதிரை பேரம் நடத்தி கொல்லைப்புறமாக வந்துதான் ஆட்சியை பிடிக்கின்றார்கள். மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை மிரட்டி அவர்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடித்தார்கள். இதேபோல் கர்நாடகாவிலும் ஆட்சியை கலைத்துதான் இவர்கள் ஆட்சியை பிடித்தார்கள். இதைத்தான் அவர்கள் ஆளும் 17 மாநிலங்களிலும் செய்து வருகின்றார்கள்.

முதலில் அவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும். பாஜகவினர் குறை கூறுவதை மட்டுமே ஒரு தொழிலாக வைத்துள்ளார்கள் என கடுமையாக சாடினார்.