• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மிதமான மழை

Byமதி

Dec 13, 2021

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணமலை, நாகை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.