• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் ரயில் நிலையத்தில்17 கிலோ குட்கா பறிமுதல்..,

ByS.Ariyanayagam

Dec 17, 2025

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 17 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு புருலியாவிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் திருநெல்வேலி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் காலை வந்தது.

திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் காவலர்கள் மணிமாறன், லோகேஷ், கோமதி, சித்ரா ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று இருந்த பேக்கை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.