அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி நாடான்குளத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் 2025-2026 ன் கீழ் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய கலையரங்கம் மற்றும் இரும்பிலான கொட்டகைக்கு முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான
.தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி நாடான்குளம் இசக்கியம்மன் கோவில் அருகில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டுத் திட்டம் 2025-2026 ன் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய கலையரங்கம் மற்றும் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இரும்பு கொட்டகைக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று (04.09.2025) நாடான்குளத்தில் நடைபெற்றது.

இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான
.தளவாய்சுந்தரம் பேசும்போது தெரிவித்தாவது:-
மக்களின் தேவைகளை அறிந்து அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறேன். இதனடிப்படையில் இப்பகுதியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் மற்றும் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகளை சிறப்பாக, குறித்த காலத்தில், புகாருக்கு இடமின்றி செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் முடிந்த அளவு மக்கள் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி உட்பட அனைத்து பகுதிகளும் முன்னேற கல்வி மிக முக்கியமானதாகும். பெற்றோர்கள், குழந்தைகளை நல்லமுறையில் கல்வி பயிலச் செய்து அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பணிகள் முடிந்து, அமைய இருக்கும் புதிய கலையரங்கம் மற்றும் இரும்பிலான கொட்டகையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கூறினார்.
இவ்விழாவில் நாடான்குளம் ஊர்த்தலைவர் வேலய்யா, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர் விஜயன், 6-வது வார்டு உறுப்பினர் செல்வகுமார், கழக நிர்வாகிகள் சிவபாலன், தங்கவேல், பேராசிரியர் நீலபெருமாள், ரெமோ, குமாரசுவாமி மற்றும் ஊர்ப்பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





