• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விழா..,

BySeenu

Sep 4, 2025

கோவையில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு நிறுவன விழாவில் கல்லூரி வளாகத்தில் நடந்தது விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி யுமான சசிதரூர் கலந்து கொண்டு பேசினார்..

அப்போது பேசிய அவர், காலநிலை மாற்றம் தற்போது பெரும் சவாலாகி வருவதாக கூறிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கை மாற்றங்கள் ஏற்படுகின்றன காலநிலை மாற்றத்தை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்கள் கண்டறிய வேண்டும் என தெரிவித்தார்..

மாற்று எரிசக்தி குறித்து யோசிக்க வேண்டும் சூரிய சக்தி காற்றாலை மின்சாரம் ஆகிய இயற்கையை பாதிக்காத எரிசக்திகளை பயன்படுத்த வேண்டும் இயற்கை பாதிக்காத கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறிய அவர்,

இந்தியாவில் காலநிலை மாற்றம் மக்கள் தொகை பெருக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறிய அவர், நமது தகவல்கள் திருடப்படுவதை தடுக்க இணைய பாதுகாப்பை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும்.

புதிய ஸ்டார்ட் அப் உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது புதிய கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது சாட் ஜிபிடி இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது இந்திய தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் பிற நாடுகளை நம்பி உள்ளதை குறைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்..

நிகழ்ச்சியில்,கல்லூரி முதல்வர் பிரகாசம் பி எஸ் ஜி அண்டு சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.