• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஓடு பதிப்பிக்கும் பணியை தொடங்கி வைத்த மேயர்..,

நாகர்கோவில் மாநகராட்சி 23- வது வார்டுக்குட்பட்ட டதிஸ்கூல் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா வரை உள்ள சாலையின் இரு பக்கமும் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் கூடிய நடைபாதை அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் .ரெ.மகேஷ் அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்களுடன் தொடங்கி வைத்தார்.

உடன் துணை மேயர் திருமதி. மேரி பிரின்ஸி லதா மண்டல தலைவர் ஜவஹர் மாநகர அவை தலைவர் பன்னீர் செல்வம் மாநகர துணை செயலாளர் வேல்முருகன் வட்ட செயலாளர் சுரேஷ் கழக நிர்வாகிகள் அனந்த பால், செல்லம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.