மதுரைமதுரை மேல மாசி வீதி கண்ணன் ரெஸ்ட் ஹவுசில் வாடகை எடுத்து வசித்து வருபவர். இரத்தினகிரி விஸ்வநாதன். இவர் பல நேரங்களில் போலீஸ் கமிஷனர், டிஜிபி மற்ற அதிகாரிகளும் எனக்கு தெரியும் எனக் கூறி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

டவுன் நேதாஜி ரோட்டில் உள்ள ஜூவல் ஒன் ஜீவல்லர்ஸ் நகை கடையை
செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டியுள்ளார். அதை ஏன் போட்டோ எடுக்கிறீர்கள் என கடையின் மேனேஜராக வேலை பார்த்து வரும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் கேட்டதற்கு தகாத அசிங்கமான வார்த்தைகளால் பேசி பணம் கொடு இல்லை என்றால் நகை கடையை பற்றி போட்டோ மற்றும் வீடியோவுடன் தவறான செய்திளை பரப்பிவிடுவேன் என கூறி மிரட்டி உள்ளார்.
நகைக்கடை ஊழியர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.திலகர் திடல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் பல்வேறு நிறுவனங்களை இதே போன்று மிரட்டி பணம் பறித்தார் தொடர்ந்து புகார்கள் வந்ததால் போ லீசார் அதிரடி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.