• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காவல் அலுவலகத்தில் கர்ப்பிணிப் பெண் புகார் மனு..,

ByS. SRIDHAR

Aug 23, 2025

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூர் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரின் மனைவி புஷ்பவள்ளி இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு என்று தெரிவித்தார்.

அந்தப் புகார் மனுவில் கடந்த அஞ்சு வருடங்களுக்கு முன் திருமணம் எங்களுக்கு நடைபெற்றது. எங்களுக்கு இரண்டு வயது பையன் உள்ளான் தற்போது நான் ஐந்து மாதம் கர்ப்பிணியாக உள்ளேன் நாங்கள் குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் எனது கணவர் மிக நல்லவர் தினந்தோறும் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறோம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக குறிப்பாக 20.08.2025 அன்று இரவு எட்டு மணி அளவில் எனது கணவர் அண்ணா நகர் தெரு எனது வீட்டில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பிரபு மற்றும் அவருடைய கூட்டாளிகள் எனது கணவரை வழிமறித்து மோசமான வார்த்தைகளில் திட்டி பலத்த ஆயுதங்களும் கொண்டு தாக்கியுள்ளனர்.

திரைப்படத்தில் போல் யாரு கணவர் கைகளில் பிடித்துக் கொண்டு உருட்ட கட்டை மர்மஆயுதங்கள் கொண்டு அடித்ததில் பலத்த காயம் அடைந்த என் கணவர் சமாளிக்க முடியாமல் கீழே விழுந்தார். அருகில் இருந்த நபர்கள் என்னிடம் கூறிய பின்னர் தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு நான் சென்றபோது என் கணவர் சாலை ஓரத்தில் வலி தாங்க முடியாமல் கதறிக்கொண்டு இருந்தார். பின்னர் சென்றபோது என்னை தகாத வார்த்தையில் திட்டியும் எவ்வளவு மோசமான கெட்ட வார்த்தையில் பேச முடியுமோ அவளதுக்கு என்னைத் திட்டி என் கணவரும் நானும் இப்பகுதியில் வசித்தால் ஏற்கனவே நான் கொலை செய்து இருக்கின்றேன்.

இவன் எனக்கு பெரிதல்ல குடும்பத்துடன் எரித்து கொன்று விடுவேன் என்னை கேட்பதற்கு யாரும் இல்லை என்னிடம் பணம் பழக்க வழக்கம் அதிகமாக இருக்கிறது என்று பிரபு மற்றும் அவனுடைய கூட்டாளிகள் கொலை மிரட்டல் விட்டனர். நான் அழுது கொண்டே என் கணவரை மீட்டு அருகில் இருக்கும் திருச்சிஅரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என் கணவருக்கு விலா எலும்பு உடைந்ததாக மருத்துவர் கூறினார்கள்.

தற்போது என் கணவர் மருத்துவமனையில் இருக்கின்றார் சம்பவத்தை மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தேன் . அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என் கணவரை மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் அழித்துவிட்டு என் வீட்டிற்கு உணவு செய்துவர சென்றபோது தினந்தோறும் பிரபு மற்றும் கூட்டாளிகள் தகாத வார்த்தைகளில் திட்டியும் மருத்துவமனையில் இருந்து உன் கணவர் வரமாட்டான் இன்று எரித்து விடுகிறோம். என்று தொடர்ந்து கொலை மிரட்டல் செய்து வருகிறார்கள்.

பிரபு என்பவர் தனது கூட்டாளிகளுடன் கட்டப்பஞ்சாயத்து கொலை கை கால் உடைப்பது என பல்வேறு குற்ற செயல்கள் செய்து வருகிறார். அதனால் எங்களுக்கு மிக பயமாக இருக்கின்றது. ஆகையால் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எங்களை காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் என் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக என்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புஷ்பவள்ளி தனது குழந்தையுடன் புகார் மனு அளித்தார்.