மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மதுரை சிவகங்கை மண்டலத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மதுரை மண்டல தலைவர் சுல்தான் செயலாளர் கிறிஸ்டல்ஜீவா சிவகங்கை ராம்நாடு மண்டல செயலாளர் விஜயகுமார் கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர் அசோக்குமார் உட்பட கல்லூரி பேராசிரியர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழக அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பணி மேம்பாடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.


கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் கல்லூரி கல்வி பணியில் பணியாற்றும் அரசு கல்லூரியின் மூத்த ஆசிரியர் ஒருவரை கல்லூரி கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதினை 65 ஆக உயர்த்த வேண்டும். அரசு கல்லூரி ஆசிரியர்களை புள்ளி விவரம் சேகரிப்பாளர்களாக மாற்றக்கூடாது. புள்ளி விவரங்களை சேகரிக்க தனி அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் கல்லூரி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




