• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா.,

Byஜெ.துரை

Aug 14, 2025

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு

தயாரிப்பில், வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

இதில் இயக்குனர் அரவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் இந்த படத்தில் நடித்திருந்த பப்லு பிரித்திவிராஜ், புதுப்பட்டு சக்திவேல், வாழை ஜானகி, கதாநாயகி ஏஞ்சல், ஸ்ரீதேவி மற்றும்

இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கங்கை அமரன் பேசுகையில்,

கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம், ஆனால் அவர் இப்போது எம்பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஊமை விழிகள் படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார்.

ஹேராம் படத்தில் புதுவிதமான பாட்டு உருவாகுவதற்கு நான் தான் காரணம்.

ஆனால் இதை இளையராஜாவோ கமலஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை.

எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதையொட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது. நான் இசையமைக்க தயாராக இருக்கிறேன்.

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா.

அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி வளர்ந்தார். அந்த காலகட்டத்தில் கல்லூரி விழாக்களில் பேசும் போதெல்லாம் பல இடங்களில் இளையராஜா வளர்ந்து வருவதற்கு நானே காரணம், என் பாடலே காரணம் என்று வைரமுத்து கூறி வந்தார்.

இதைக் கேள்விப்பட்டு நான் அண்ணன் இளையராஜாவிடம் சொன்ன போதும், அவர் நம்பவில்லை.

ஆதாரப்பூர்வமாக அதை அறிந்து கொண்ட பின்பு இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் விரிசல் ஏற்பட்டது.

இளையராஜாவுக்கும் வைரமுத்திற்கும் விரிசல் ஏற்பட காரணமே, ‘இளையராஜா என்னால் தான் வளர்கிறார் என்று வைரமுத்து வெளி மேடைகளில் பேசியது தான். என பேசினார்.