அடிப்படை வசதிகளை செய்து தரக்கூறி ஏராளமான பெண்கள் விடுதலை சிறுத்தை கட்சியினருடன் இணைந்து ஆட்சியரகத்தில் இன்று புகார் மனு வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் புல்வயல் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த ஏராளமான ஆதிதிராவிட பொதுமக்கள் தங்களுடைய கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

தங்களுடைய வீட்டுமனைக்கு பட்டா கிடைக்கவில்லை எனவும் அடிப்படை தேவையான சாலை வசதி குடிநீர் வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் எனவும் இதேபோன்று பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் கூறி புகார் மனு வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெள்ளை நெஞ்சன் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு இதுவரை அடிப்படை செய்திகள் எதுவும் இல்லை.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட குடும்பங்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும் என தெரிவித்தார்.