புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகள் கொண்ட படுக்கைகள் கட்டிட பிரிவில் நள்ளிரவு நேரத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்துஏற்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக அந்த கட்டிடத்தில் நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்தில் டீன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.








