புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான முனீஸ்வரர் ஆலயம் ஆடி மாத திருவிழா அதி விமர்சியாக நடைபெற்றது. எல்லை காவல் தெய்வமாக வணங்கும் முனீஸ்வரருக்கு காலை முதல் தொடர்ந்து பல்வேறு விதமான அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது

அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.