கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துலாடம்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இங்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் சுற்றுச்சுவருக்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர் தீண்டாமை சுவர் எழுப்புவதாக குற்றச்சாட்டு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி தீண்டாமை சுவர் எழுப்புவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் வருவாய் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் சுவற்றை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் இடித்து அகற்றப்படும் என வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தை சார்ந்த ஒரு தரப்பு பொது மக்கள் நேற்று நள்ளிரவில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் காத்திருந்த நிலையில், வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், சுமார் 400க்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கண்காணிப்பில், முத்துலாடம்பட்டி பகுதி காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.






; ?>)
; ?>)
; ?>)
