புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதுக்கோட்டை இணைந்து இராணியார் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா (தொடர் சேவையாக) சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் S.கலைவாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிறந்த 40 குழந்தைகளுக்கு (HIMALAYA BABY KIT) வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்க பொருளாளர் கண.மோகன் ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் டாக்டர் D.வெங்கடேசன் துணை ஆளுநர் B.அசோகன், பேராசிரியர் டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ராமலதா ராணி, இருக்கை மருத்துவர் டாக்டர் இந்திராணி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் டாக்டர்கள் அரவிந்த் திருஞானசம்பந்தன், வெண்முகில், சுகன்யா, மோனிகா, ராமலிங்கம், இங்கர்சால், ஹேமா ஹரிணி, இளையராஜா, சிலம்பரசன், கோகுல ரமணன் ஜின்னா, இந்து பிரியதர்ஷினி, ஹரிஷ், வாழ்த்துரை வழங்கினார்கள் நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் S.பார்த்திபன், K.ஓம்ராஜ், சுதாகர், ராமகிருஷ்ணன், ஆரவாமுதன், பாரூக் நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுமார் 35 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் செவிலிய மாணவிகள் கும்மி பாட்டு வில்லுப்பாட்டு நடனம் போன்றவை சிறப்பாக செய்து காண்பித்தனர் நிறைவாக செயலாளர் R.சங்கர் நன்றி கூறினார்.