• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மயான பகுதியில் இறந்த வாலிபர் போலீசார் விசாரணை..,

ByKalamegam Viswanathan

Aug 7, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன் குளம் மயானம் அருகே இருக்கும் சாக்கடையில் ஆண் ஒருவர் விழுந்து இருப்பதாக தகவல் வந்ததையடுத்து திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கடையில் இருந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வேடர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் பால் கண்ணன் (வயது 37 )என தெரியவந்தது .இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.