மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் திரளி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் திரளி,ஆலம்பட்டி புதுப்பட்டி, நடுவகோட்டை கிழவனேரி,அலப்பலச்சேரி சௌடார்பட்டி,காங்கேயநத்தம், உரப்பனூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
இதில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரகலா,மலர்வண்ணன்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தீபலட்சுமி, மகேஸ்வரி திருமங்கலம் வட்டாட்சியர் சுரேஷ்கிளமண்ட் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ராஜ்குமார் ராஜேந்திரன் தாமரைச்செல்வி தமிழரசன் சுரேஷ்,திக்விஜயன்,பால்ராஜ் இளங்கோ உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் வில்லூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் வில்லூர் போத்தநதி புளியங்குளம் மறவபட்டி தென்னமநல்லூர் சித்தூர் புதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
இதில் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேலு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி வட்டாட்சியர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர்கள் சேகர், பாண்டியராஜன், சந்தானசோனை முத்து, பரமசிவம், வனிதாலட்சுமி,செல்வநாயகம் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.