புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு தாலுகா மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வர விழாவை முன்னிட்டு பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சங்கம் சார்பில் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களிடம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்து பேசினார்.

விழாவில் அரசு தாலுகா தலைமை மருத்துவர் செந்தமிழ் செல்வி வரவேற்றார் பொன் ரோட்டரி சங்க தலைவர் சுதாகரன் தலைமை வைத்தார் நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பரிசு பெட்டகங்கள் சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டது அதேபோல் ஸ்ரீ துர்கா மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மருத்துவர் அழகேசன், பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்க தலைவர் சுதாகரன் ஆகியோர் தலைமை வகித்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர். விழாவில் ரோட்டரி சங்க பொருளாளர் ரமேஷ், பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் பேராசிரியர் குமாரசாமி, ஆறுமுகம், உறுப்பினர் மருத்துவர் செல்வகுமார், இளையராஜா, அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.