• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தாய்ப்பால் வார விழா..,

ByK Kaliraj

Aug 4, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சிவகாசியில் இந்திய மருத்துவக் கழகம் சார்பாக தாய்ப்பாலின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடந்த ஊர்வலத்தை முன்னதாக மேயர் சங்கீதா இன்பம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களடங்கிய பதாகைகளை கையிலேந்திச் சென்றனர்.