• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வெளியிடப்பட்ட நான்காண்டு சாதனை மலர்..,

ByS. SRIDHAR

Aug 2, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொகை சார்பில் நான்காண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு என்ன என்ன திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. பொதுமக்கள் எத்தனை பேர் பயன்படுத்தினர் என்பது குறித்து சாதனை மலரை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் வெளியிட்டனர். பிரதிகளை ஆட்சியர் அருணா எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி,

ஓபிஎஸ் பிரேமலதா ராமதாஸ் ஆகியோர் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார். மூவரும் முதல்வரை சந்தித்தது அரசியல் நோக்கம் இல்லை

நலம் விசாரிப்பதற்காக தான் மூவரும் முதல்வரை சந்தித்தனர்.

தமிழகத்தில் 7 லட்சம் பீகார் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்
வாக்காளர்களை வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்.

தமிழ்நாடு வாக்காளர்கள் மனநிலை வேறு பீகார் வாக்காளர்களின் மனநிலை வேறு… தேர்தல் ஆணையத்திற்கு உரிய நேரத்தில் எங்கள் கட்சியும் எங்கள் தலைவரும் கொண்டு செல்வார்கள்.

*எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை மதவாத கட்சி இல்லை என்று கூறினால் அதுபோல் ஒரு துரோகம் ஒன்றுமே கிடையாது. கூட்டணியில் இருப்பதற்காக பாஜகவிற்கு வக்காலத்து வாங்குவதற்காக பாஜக மதவாத கட்சி இல்லை என்று கூறுவது பச்சை பொய்.

திமுக அரசு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எங்களுடைய திட்டங்கள் இந்த திட்டத்சுழி ஏதாவது ஒரு பிள்ளையார் சுழி போட்டு இருந்தால் கூட அவர்கள் திட்டங்கள் என்று கூறலாம் நாங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் அனைத்தும் புதிதாக முதலமைச்சரின் மனதில் தோன்றிய திட்டங்கள்.

இதற்கு எடப்பாடி உரிமை கொண்டாட முடியாத காரணத்தினால் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டார்கள் என்று கூறுகிறார்.
நாங்கள் நிறைவேற்றியுள்ள திட்டங்களில் ஒன்றைக் கூட அவர் செயல்படுத்த திட்டமிட்டதில்லை.

ஓபிஎஸ் பிரேமலதா ராமதாஸ் ஆகியோர் முதல்வரை சந்தித்தது என்பது மரியாதை நிமித்தமான நலம் விசாரிப்பை சந்திப்பு தான்.

கூட்டணி குறித்து தொடக்கத்திலேயே எதுவும் கூறிவிட முடியாது.

கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்கு முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு
உரிய நேரத்தில் முதல்வர் முடிவு செய்து கூட்டணி குறித்து அறிவிப்பார்.

கூட்டணிக்குள் மூவரையும் கொண்டு வந்தால் தொகுதி சீட்டு பிரச்சனை வந்து விடுமா என்ற கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் அது குறித்து முதல்வர் சரியான முடிவு எடுப்பார் அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக வெற்றியாக தான் இருக்கும்.

முதல்வர் போடுகிற கணக்கு தப்பு கணக்கு இருக்காது வெற்றி கணக்காக தான் இருக்கும்.

ஒரு அரசியல் கட்சித் தலைவர் மற்றொரு அரசியல் கட்சி தலைவரின் உடல்நலம் குறித்தும் அதை நாடகமாடுகிறார் என்பது குறித்தும் பேசுவது என்பது அநாகரிகமானது மட்டகரமான செயல் எதுவும் கிடையாது.

அதை எடப்பாடி பழனிச்சாமி செய்து கொண்டிருக்கிறார் என்றால் தோல்வி அவரது கண்ணுக்கு முன்னால் வந்துவிட்டது என்று பொருள் தோல்வியை பார்க்கின்ற காரணத்தினால் அவர் தன்னை மறந்து என்ன பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்ளாமல் கண்ணா பின்னா என்று பேசுகிறார்.

இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை.

பிரதமர் மோடியை விட நைனார் நாகேந்திரன் அதிக செல்வாக்கு படைத்தவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன் அதனால் தான் ஓபிஎஸ்-க்கு பிரதமரை சந்திக்க நான் சன் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறார்.

ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து எப்போது வெளியே வந்திருக்கலாம் தற்போது வந்துள்ளார் இது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது.

அரசுத் திட்டங்களில் முதலமைச்சர் பெயரோ அரசியல் கட்சித் தலைவர்களின் பெயரோ இடம்பெறக்கூடாது என்று உயர்நீதிமன்றம கூறியுள்ளது. இரண்டு நாளில் பதில் கூற நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது இரண்டு நாட்களில் தமிழக அரசு சார்பில் இதுகுறித்து கருத்து கூறி விளக்கத்தை கூறுவார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி பாஜக மதவாத கட்சி அல்ல என்று ஏற்றுக் கொள்வாரே ஆனால் அதைப்போன்ற துரோகம் ஒன்றுமே கிடையாது.

கூட்டணி வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை வைத்துக் கொள்ளலாம்
பாஜகவிற்கு வக்காலத்து வாங்குவதற்காக அது மதவாத கட்சியே அல்ல என்று கூறுவது பச்சை பொய் யாருடைய அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று போகப் போக தெரியுமே தவிர இன்னைக்கு ஜோசியம் கூற முடியாது.

ஆனால் எங்களுடைய தலைவர் அரசியலில் ஸ்டடி ஆக சென்று கொண்டிருப்பவர்.

26 தேர்தலில் எடப்பாடி கூறியது அனைத்தும் வட்டமான பொய் என்பதை நிரூபித்து திமுக மிகப்பெரிய திருமயம் தொகுதியில் பெரும் அதற்கான அடித்தளங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது.