• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் மாநிலத் தலைவர் பேட்டி..,

BySeenu

Jul 31, 2025

போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்கிறோம் என்று அமெரிக்கா கூறுகிறது.
இந்திய நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பை யார் ஆளுகிறார்கள்.
இதற்கு பதில் அளிக்காமல் ட்ரம்ப் யிடம் பேசவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில் நாங்கள்தான் போரை நிறுத்தினோம் நாங்கள் தான் பாகிஸ்தான் அதிபர் இடம் பேசினோம் என்று ஏன் கூறவில்லை.

டிரம்ப் கூறியதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை வாஜ்பாய் கூட இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா அதிபருக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறுவதற்கு ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள். ராகுல் காந்தியை எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூற வேண்டும். ட்ரம்புக்கு வருவது பொய் என்று கூறுவதற்கு ஏன் மறுக்கிறார்கள்.

சசி தரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு அப்படி பேசி இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து என்னுடைய பார்வையில் சசிதரூர் செய்தது தவறு விசாரணைக்கு அழைத்து செல்பவர்கள் உயிரிழப்பது தொடர்பான கேள்விக்கான பதில்- நம் உயிர்கள் எந்த விதத்திலும் சேதாரம் அடைந்து விடக் கூடாது.
தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க என்ற இடத்தில் தான் காவல்துறை இருக்கிறது
முதல்வர் நேர்மையாக அரசியல் செய்கிறார் அவருக்கு எந்த ஒரு குந்தகமும் காவல்துறை விளைவித்து விடக்கூடாது.

ஆணவ படுகொலைகளுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் இந்த சட்டம் கொண்டு வருவதற்கு தயாரானது இடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசு மறுக்கிறது. எனவே விரைவில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.