• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காமராஜர் பிறந்தநாள் பங்கேற்ற கே.டி.ஆர்..,

Byமகா

Jul 28, 2025

சிவகாசியில் நடந்த தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக- பாஜக கூட்டணி பலமாக இருப்பதற்கு சாட்சியாக, அத்தாட்சியாக, அதனை தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு மிகவும் பலம் வாய்ந்தது. தமிழகம், தமிழ் மன்னர்கள், தமிழ்க்கலாச்சாரம் ஆகியனவற்றின் மீது பிரதமர் நரேந்திர மோடி ஒரு தமிழ்ப் பற்றாக இருப்பதற்கு அடையாளமாக அவர் தமிழர் பாரம்பரியத்தை வெளிக் கொணரும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

பகுத்தறிவாளர்களும் போற்றக்கூடிய அளவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு பிறந்த தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது. அவர் தமிழக மக்கள் மீது அளப்பரிய அன்பை வைத்துள்ளார் என்பது நிரூபணம் மாகியுள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி பலமாக உள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்துக் கொண்டது எடுத்துக்காட்டாக உள்ளது.

ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளங்கள். உலகளவில் இந்தியாவின் கலாச்சாரத்தையும், சோழர்களின் பாரம்பரியத்தையும் எடுத்துச் சென்று உலகையே ஆளக்கூடிய அளவுக்கு வல்லமை படைத்தவர்களாக இருந்துள்ளார்கள்.

வெளிநாடுகளில் உலக அளவில் பல்வேறு சிறப்புகளை பெற்றவர்கள். தந்தையும் மகனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவனுக்கு ஆலயத்தை எழுப்பி ஆன்மீக அரசாட்சி நடத்தியது இந்தியாவுக்கே காட்சி பொருளாக இன்றைய தினம் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது வைத்திருக்கின்ற புகழையும், பெருமையையும் தெரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருமாவளவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது,பாரதப் பிரதமரை வரவேற்றது சிறப்புக்குரியது, போற்றுதலுக்குரியது.

பிரதமர் நரேந்திர மோடியின் பெருமைகளை சிறப்புகளை யார் எடுத்துச் சொன்னாலும் பாராட்டுதலுக்குரியது.

தமிழ்நாடு, தமிழக மக்கள், தமிழர் தாத்தா திருவள்ளுவர் மீதும் அளப்பரிய அன்பு கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நினைவு கூறும் வகையில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அப்படிப்பட்ட அவரை வாழ்த்துவது வரவேற்பது தமிழர்களின் கடமை உரிமை.

திமுகவினர் கூட பல பேர் மகிழ்ச்சியடைவார்கள். தமிழ் வரலாற்றை, கலாச்சாரத்தை, மண்ணின் பெருமையை, வரலாற்றுச் சுவடுகளை எடுத்துச் சொல்லி பேசுகின்ற தலைவனாக பிரதமர் நரேந்திர மோடி விளங்குவது தமிழகத்திற்கே பெருமை. என்றார்.