• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் பணியேற்பு விழா..,

ByS. SRIDHAR

Jul 21, 2025

திருவப்பூர் அம்மன் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் 9ஆம் ஆண்டு பணியேற்பு விழா நடைபெற்றது.

விழாவில் ரவிச்சந்திரன் RDO தலைமை ஏற்க லயன்ஸ் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஜவகர் கலந்து கொண்டு 2025 -26 ஆம் ஆண்டிற்கான தலைவராக சேது கார்த்திகேயன், செயலாளராகஇளங்கோ, பொருளாளராகசந்தை குமார் ஆகியோருக்கு பணியேற்பு விழா செய்து வைத்தார். விழாவில் 100க்கும் மேற்பட்டவருக்கு விருதுகளும் நலத்திட்ட உதவிகளையும் செஞ்சுரி லைன் சங்கத்தின் பட்டய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வை.முத்துராஜா, மேனாள் தலைவர்கள் முன்னாள் தலைவர் சோம.நடராஜன், சங்கத்தின் வளர்ச்சி குழு தலைவர் , கண்ணன், ஆகியோர் வழங்கி வாழ்த்தினார்கள்.

விழாவில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக பணியேற்றுக்கொண்ட நிர்வாகிகளையும் விருது பெற்றோர்களையும் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
2025 -26ஆம் ஆண்டின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சேது கார்த்திகேயன்
ஏற்புரை வழங்கும் போது விளையாட்டில் தேசிய அளவில் மற்றும் உலகளாவிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு செஞ்சுரி லைன் சங்கத்தின் பாராட்டுக்களும் உதவிகளும் மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவற்றை உலகளாவிய அரிமா சங்கத்தின் வழிகாட்டுதல்படி என்னென்ன திட்டங்கள் உள்ளதோ அவை அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும் என்று கூறினார்.

மிகச் சிறப்பாக நடைபெற்ற விழாவில் மண்டல தலைவர் குமாரசாமி மாவட்ட அதிகாரி காந்தி வட்டாரத் தலைவர் ராஜ்குமார்,கலந்து கொள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மாருதி கண மோகன்ராஜ் செயலாளர் இப்ராஹிம் பாபு பொருளாளர் பிரசாத் ஆகியோரது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களும்
சமூக சேவைகளும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.