புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி என்ற கிராமத்தில் மாமன்னர் ராஜ ராஜ சோழனால் உருவாக்கப்பட்ட குடைவரை முருகன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையாக இருந்து வருகிறது. இக்கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகளை அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து கிராம முறைப்படி பல தலைமுறைகளாக வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் அந்த கோவிலை வழிநடத்தி வருவதாகவும் எனவே மாமன்னர் ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்ட இக்கோவிலை தனி நபர் கட்டுக்குள் கொண்டு வருவதை தடுத்து நிறுத்தி இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக மீட்டெடுத்து அரசு உடமையாக்க வேண்டும் அல்லது அப்பகுதி பொதுமக்களின் பொதுக் கோவிலாக அரசு அறிவிக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்
இதன் அடிப்படையில் இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.