திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கெங்கநாயக்கன் பாளையத்த்தில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து கொண்டு லாரி உரிமையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பதிவாளருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் காலம்சென்ற எனது தாத்தா குப்புசாமி என்பவருக்கு சொந்தமாக 24 ஏக்கர் விவசாய நிலம் இருந்ததாகவும் அதனை எனது தந்தை கந்தசாமி உட்பட வாரிசுகளான பழனிச்சாமி, முருகேசன், அருணாச்சலம் ஆகிய நான்கு பேருக்கு சரிசமமாக தலா 6 ஏக்கர் நிலத்தை பகிர்ந்து கொடுத்துள்ளார். இந்நிலையில் குப்புசாமி வாரிசுகளில் ஒருவரான அருணாச்சலம் 1991 ஆண்டு விபத்தில் ஏற்பட்டதால் திருமணம் ஆகாமல் இறந்து விட்டார்.
இந்நிலையில் அவரது சொத்தான 6 ஏக்கர் நிலத்தை பழனிச்சாமி, முருகேசன், கந்தசாமி ஆகிய மூன்று பேரையும் வாரிசாக கருதி தலா 2 ஏக்கர் பிரித்து கொள்ள வேண்டும். ஆனால் எனது பெரியப்பா முருகேசன் மீதியுள்ள பழனிச்சாமி, கந்தசாமி ஆகிய இரண்டு பேருக்கும் இறப்பு சான்றிதழ் வாங்கி அவரது வாரிசுதாரர்களையும் மறைத்து அருணாச்சலத்திற்க்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை முறைகேடாக தனது மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக கூறினார். மேலும் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி வாரிசு சான்றிதழ் பார்க்காமல் பல்லடம் சார் பதிவாளர் உமா மகேஸ்வரி பத்திர பதிவு செய்ததாக கூறி கந்தசாமி மகன் கார்த்திகேயன் பல்லடம் பத்திரத்பதிவுதுறை அலுவலகத்தில் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கிருந்த பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மாலைக்குள் உங்கள் மனுவை விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியப் பின்னர் கார்த்திகேயன் தர்ணா போராட்டத்தை கைவிட்டு சென்றார். மேலும் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக கூறி தனி நபராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.