புதுக்கோட்டை மாவட்டம் செங்கீரையில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது அந்த பகுதியில் 100 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் வைத்திருந்தும் அதிகாரிகளிடம் குளம் அமைக்க பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எதுவும் செய்ததில்லை என கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர் மேலும் செங்கீரை பகுதியில் உள்ள கருவஞ்சி கண்மாய் முள்வேலி அமைக்கவும் கிணறு பராமரிப்பு பணி அமைக்கவும் தோரண வாய்க்கால்களை தூர்வார செய்யவும் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றவில்லை என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதில் சொல்ல முடியாமல் திகைத்த அதிகாரிகள் கூட்டத்தை பாதியுடன் முடித்து வெளியேறினர். இதனால் அங்கு வந்த விவசாயிகள் அதிகாரிகள் பாதியில் வெளியேறியதால் அதிர்ச்சியுடன் நின்றனர்.

மேலும் எங்கள் பகுதியில் 13 வருடங்களாக விவசாயம் செய்ய முடியாமல் இருக்கும் தரிசு நிலங்களுக்கு குளம் வெட்டி வரத்துவாரியை தூர்வாரி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.