• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ரவுடியை கூட்டாளிகளே கொலை செய்த சம்பவம்!!

ByVasanth Siddharthan

Jul 12, 2025

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கழுத்தை அறுத்து பின்பு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சிவமணி (30) இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவமணி தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் கொடைக்கானல் சென்றுள்ளார். நேற்று இரவு மதுரை சாலையில் வத்தலக்குண்டு திருநகர் அருகே அந்த கார் வந்தபோது காரில் இருந்த சிவமணி மற்றும் அவரது கூட்டாளிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் காருக்குள் வைத்து சிவமணியின் கழுத்தை அறுத்து அவரது கூட்டாளிகள் அரை உயிராய் துடித்துக் கொண்டிருந்த சிவமணியை சாலை ஓரம் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் தூக்கிச் சென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.