புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, தீத்தானிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு தண்ணீர் வசதி வேண்டியும், சாலை வசதி வேண்டியும், குளம் தூர்வார வேண்டியும், குழந்தை மையம் கட்டிடம் பராமரிப்பு செய்ய வேண்டியும், ஆலங்குடி தாலுகா மஞ்சுவிரதி ஊராட்சி மல்லாரம்பட்டியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட காலணி வீடுகள் பராமரிப்பு செய்ய வேண்டியும், கிராம அதே கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட தோராய பட்டாவை கிராம கணக்கில் ஏற்ற வலியுறுத்தியும், புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் வசிக்கும் ஆதி திராவிட மக்களுக்கு புதுக்கோட்டை வழக்கு கிராமத்தில் வழங்கப்பட்ட துறை கிராம கணக்கு ஏற்ற வலியுறுத்தியும், பலமுறை அரசு உயர்நிலைகளும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரில் நீளம் பண்பாட்டு மையம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.