• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

இலவச திருமணம் செய்யும் தம்பதியினருக்கு, 70 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில், தமிழக அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கோவில்களில் இலவச திருமணம் செய்யும் தம்பதியினருக்கு, திருக்கோவில் வாயிலாக, 70 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் நடத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் குமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2 திருமண ஜோடி தம்பதிகளுக்கு இன்று திருமணம் நடந்தது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், நாகர்கோயில் உதவி ஆணையர் தங்கம், ஆய்வாளர் சரஸ்வதி முன்னிலையில் திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், திருக்கோவில் வாயிலாக, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் (4 கிராம் தங்கம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை உள்ளிட்டவை) திருமண சீர்வரிசையாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன், தர்மேந்திரா, திமுக நிர்வாகிகள் ஸ்டார்மின், விஷ்ணு, மால்டன் ஜினின், சுகந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.