திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 10 மற்றும் 11-வது வார்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதம் காலமாக அப்பகுதி மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சரியான குடிநீர் வழங்காததால் கோபமடைந்த பகுதி பொதுமக்கள் மாணிக்கபுரம் சாலையில் திடீரென பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் ஒரு மாதம் காலமாக சரியாக குடிநீர் வரவில்லை எனவும் அவ்வப்போது வரும் குடிநீர் குழாய்களில் எண்ணை போல் வடிவதால் ஒரு குடம் நிரம்புவதற்கு 45 நிமிடங்களுக்கு மேலாகிறது. எனவே எங்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்க வில்லை. உடனடியாக நகராட்சி நிர்வாகம் இதற்கு தீர்வு காணவில்லை என்றால் தொடர் சாலை மொழியில் ஈடுபடும் என தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அளித்து விழுந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை சீராக குடிநீர் வழங்குவதாக உத்தரவாதம் அளித்த பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மாணிக்காபுரம் சாலையில் திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.








