பல்லடம் அருகே மங்கலம் அடுத்த நீலிப்பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 நைஜீரியர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து மங்கலம் போலீசார் விசாரணை.
பனியன் நகரமான திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கி பனியன் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சுல்தான்பேட்டை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சுல்தான் பேட்டை பகுதியில் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அங்கு ஏராளமான நைஜீரியர்கள் தங்கி இருந்தனர். அவர்களிடம் ஆவணங்களை சரி பார்த்த போது 5 பேர் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது சிகேசி, சின்வேபாலினஸ், ஆண்ட்ரூ உகோச்சுக்வு, வின்சென்ட், அந்தோணி என்பதும் இவர்கள் சிசா காலம் முடிந்த பின்னரும் திருப்பூரில் முறைகேடாக தங்கி இருந்து பனியன் கொள்முதல் செய்து அதனை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.