• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சபரிமலை இந்தியா முழுவதற்கும் சொந்தம்- பொன் ராதாகிருஷ்ணன்

சபரிமலை என்பது கேரள மாநிலத்திற்கு மட்டும் சொந்தம் என விட்டுவிட முடியாது. இந்தியா முழுமைக்கும் சொந்தமானது என்பதை கேரள அரசு புரிந்து கொள்ள வேண்டும் – மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது” கடந்த ஆண்டு குரானா தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு குரானாவின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது நெய் அபிஷேகத்திற்கு கேரள அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள அரசுக்கு தெரிவிக்க விரும்புவது மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது. சபரிமலை என்பது கேரள மாநிலத்திற்கு மட்டும் சொந்தம் என விட்டுவிட முடியாது. இந்தியா முழுமைக்கும் சொந்தமானது என்பதை கேரள அரசு புரிந்து கொள்ள வேண்டும் . எனவே பக்தர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும்.

டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் திவ்ய காசிபர் காசி எந்த நிலையை பாரதிய ஜனதா கட்சியை மேற்கொண்டு வருகிறது காசி ஒளி விளக்குகள் ஒளிர வேண்டும் அதேபோன்று கங்கையில் அனைத்து படங்களிலும் மின்விளக்குகளால் ஒளிர வேண்டும் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 13-ஆம் தேதி காசியில் ஒளி விழுவதை போன்று தமிழகத்திலும் அனைத்து இடங்களிலும் மின் விளக்குகளால் ஒளிர வேண்டும் என்று அவர் கூறினார்.