• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சட்ட கல்லூரி அமைக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக சட்டகல்லூரியை சிவகங்கையில் அமைக்க வலியுறுத்தி இன்றும் நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கையில் சட்டக் கல்லூரியும் வேளாண் கல்லூரியும் அமைத்து தரப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். திமுக வெற்றி பெற்ற பின்பு திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சட்டமன்றத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு சட்டக்கல்லூரியும், வேளாண் கல்லூரியும் இந்த ஆண்டு துவங்கப்படும் என்று தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கபட்டது.

ஆனால் சட்டக் கல்லூரியும் வேளாண் கல்லூரியையும் காரைக்குடியில் அமைய இருப்பதாக தகவல் தெரிய வந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைநகர் சிவகங்கையில் அமைக்க பல்வேறு கோரிக்கை மனுக்களை சட்ட அமைச்சர், தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தொடர்ந்து காரைக்குடியில் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதால் கவனத்தை ஈர்க்கும் வகையில் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலை நகரத்தில் தான் அமைந்துள்ளது. ஆனால் விதிகளுக்கு மாறாக காரைக்குடியில் அமைப்பதாக தெரியவருகிறது. மிகவும் பின்தங்கிய சிவகங்கையில் சட்டக்கல்லூரி மற்றும் வேளாண்கல்லூரி வந்தால் மாவட்டம் மேலும் வளர்ச்சி பெறும் என்பதே சிவகங்கை மக்களின் விருப்பம். இதனை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டமும் நடந்தவுள்ளனர் 2 நாள் வழக்கறிஞர்கள் போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.