• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.க. பதஞ்சலி அமைப்புகள் யோகா பயிற்சி..,

ByM.JEEVANANTHAM

Jun 21, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையில் சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு. நீதிமன்றம், பா.ஜ.க. பதஞ்சலி ஆகியவற்றின் சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை ஒருங்கினைந்த மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி L .S சத்தியமூர்த்தி தலைமையிலும், தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் முன்னிலையிலும் ஐந்து நீதிபதிகள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையிலும், பதஞ்சலி யோகா மையம் சார்பில் யோகா மாஸ்டர் கணேசன் தலைமையிலும் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.