மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டி நான்கு வழிச்சாலையில் மினி வாகனம் மோதி ஆம்னி பேருந்து ஓட்டுனர் அழகர்சாமி என்பவர் உயிரிழந்தார்.

முன்னே சென்ற ஆம்னி பேருந்து ஒன்று விபத்து நேரிட்டதை கண்ட ஓட்டுநர் அழகர்சாமி அவர் ஓட்டி வந்த ஆம்னி பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு விபத்து நேரிட்ட பேருந்தை காண சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு ஆம்னி பேருந்து முன்னே சென்ற மினி வாகனம் மீது மோதியதால் மினி வாகனம் மீது மோதியது.
விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.