• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வில் சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை..,

BySeenu

Jun 17, 2025

இந்திய அளவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம் மாணவர்களின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் எதிர்கால கனவுகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீட் தேர்வுகள் முடிவுகள் நிலையில், கோவை மண்டல ஸ்ரீசைதன்யா பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் தேசிய அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளனர்.

அதன் படி ஸ்ரீ சைதன்யா முதல் 10 இடங்களில் 5 இடங்களைப் பெற்றுள்ளது.மாணவர்கள் கிவிஷ் 1வது இடத்தையும் திவ்யா -5 வது இடத்தையும் முகமது சமீர் 6வது இடத்தையும், பானோத்து தீரா 8வது இடத்தையும் மங்காரி வருண் 10 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதே போல தமிழக அளவில்,கோவை மண்டலத்தில் செயல்படும் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் தேசிய,மாநில அளவில் தரவரிசையில் முன்னனி இடங்களை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் கோவை மண்டல அளவில் நீட் தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாநில அளவில் நான்காம் இடம் பிடித்த மாணவர் ஹிர்த்திக் விஜயராஜா,இதே போல மாணவர்கள் நவீன் ஜயாவெல், அவந்திகா சுபாஷ்,தனுஸ்ரீ,உள்ளிட்டோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீ சைதன்யா நிறுவனங்களின் இயக்குனர் சுஷ்மா போப்பனா மற்றும் நிறுவனங்களின் தமிழ்நாட்டின் நிர்வாகத் தலைவர் ஜே ஹரி பாபு ஆகியோர் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வாழ்த்தி தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன்,நாகேஸ்வரராவ்மற்றும் நீட் பயிற்சி மைய முதல்வர்கள் கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார்,பிரசன்னா மற்றும் பள்ளி முதல்வர்கள் பாலாஜி,அஜிதா,லோகநாதன் உட்பட ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.