புதுக்கோட்டையில் 27வது தமிழ்நாடு மாநில விரைவு சதுரங்க போட்டி மற்றும் 25வது தமிழ்நாடு மாநில மின்னல் வேக போட்டி புதுக்கோட்டை விஜய் பேலஸில் சிறப்பாக நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட சதுரங்ககழக துணைத் தலைவர் அடைக்கலவன் தலைமை தாங்கினார். சதுரங்ககழக,செயலாளர் முனைவர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். தலைமை நடுவர் அரசு முன்னிலை வகித்து அறிக்கை வாசித்தார். போட்டியில் மின்னல் வேக சதுரங்கப் போட்டியிலும் சிவகங்கையைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் முதலிடம் பெற்றார்.

செங்கல்பட்டையை சேர்ந்த விக்னேஷ் இரண்டாம் இடம் பெற்றார் மூன்றாம் இடத்தை சிவகங்கையைச் சேர்ந்த தினேஷ் ராஜனும் நான்காம் இடத்தை செங்கல்பட்டை சேர்ந்த ரத்தின சபாபதியும் ஐந்தாம் இடத்தை சென்னையைச் சேர்ந்த ஹிரேனும் பெற்றனர். விரைவு சதுரங்க போட்டியில் முதலிடத்தை சிவ கங்கையை சேர்ந்த விக்னேஷ் கண்ணன் முதல் இடம் பிடித்தார். இரண்டாம் இடத்தை செங்கல்பட்டைச் சேர்ந்த ஹரி கணேசும் மூன்றாம் இடத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த பரத் கல்யாணம் நான்காம் இடத்தை திருப்பூரைச் சேர்ந்த கோகுல் கிருஷ்ணாவும் ஐந்தாம் இடத்தை திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரசன்னா கார்த்திக்கும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணாமலை ரகுபதி ரொக்கப் பரிசுகளும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கிவாழ்த்திப்பேசினார்.

சதுரங்க கழக துணைத் தலைவர் ஜெயக்குமார் நன்றி கூற பரிசளிப்பு விழா இனிதே நிறைவு பெற்றது படம் புதுக்கோட்டையில் 27ஆவது தமிழ்நாடு மாநிலவிரைவு சதுரங்க போட்டி மற்றும் 25வது தமிழ்நாடு மாநில மின்னல் வேக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. சென்னை கற்பக விநாயகர் கல்வி குழுமம் நிர்வாக இயக்குனர்அண்ணாமலை ரகுபதி பரிசுகளும் கோப்பைகளும் வழங்குகிறார். மாவட்ட சதுரங்ககழக துணைத் தலைவர் அடைக்கலவன் சதுரங்ககழக,செயலாளர் முனைவர் கணேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.