தொலைவிலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு பால்குடம் எடுத்து நடந்து வரும் பக்தர்கள்கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க சவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் வெயில் நடத்து வரும் போது 16வது மண்டபம் முதல் சன்னதி வரை தேங்காய் நார் போடப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் அருள் மிகுசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டும் முழுவதும் கொண்டாப்படும் விழாக்களில் வைகாசி விசாகத் பெருவிழா பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக விழா( வசந்த உற்சவம்) கடந்த 31ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புஷ்ப அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.

அங்கு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும் .
இதே போல நேற்று வரை நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று வைகாசி விசாக விழா நடைபெற்றது.
வைகாசி விசாகத்தையொட்டி, திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரத் துவங்கினர்.
உற்சவர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று கோயில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு காலை 5:30 மணி அளவில் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களை கொண்டு சண்முக வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.
அங்கு காலை முதல் மதியம் வரை,பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.
பக்தர்கள் பால்குடம், காவடி .பறவை காவடி அழகு குத்தி பல்வேறு வகையில் தங்களது நேற்றிக் கடனை செலுத்தினர். விழாவில் திருப்பரங்குன்றம் திருமங்கலம், விருது நகர், காரியாப்பட்டி அருப்புக்கோட்டை மற்றும் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வைகாசி விசாக பெருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.