• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கும்பாபிஷேக திருப்பணி வேலைகள்..,

குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட 490 கோயில்கள் உள்ளன. இதில் சிறமடம் அருள்மிகு சிறை மீட்ட குமரேஸ்வரர் திருக்கோயிலில், தமிழக சட்டமன்ற அறிவிப்பு 2023-24, ன் படி கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் அரசின் பொது நல நிதி ரூ. 52 லட்சம் செலவில் மேற் கொள்ளப்படுகிறது.

இதன் துவக்க விழா குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ், ஸ்ரீ காரியம் நவின், பொறியாளர் ரமேஷ், உதவியாளர் மணிகண்டன்,
திமுக துணை பொது செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சதீஷ், கோயில் பக்தர்கள் முகேஷ், சுபாஷ், ஐயப்பன், தாணு உட்பட பலர் பங்கேற்றனர்.

இதுபோல், ஆரல்வாய்மொழி அருள்மிகு நிலப்பறை கண்டன் சாஸ்தா திருக்கோயில் திருப்பணி வேலைகள் ரூ. 24 லட்சமும், ஆரல்வாய்மொழி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி வேலைகள் ரூ 1 கோடி 74 லட்சமும் செலவில் செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், திமுக ஆரால்வாய் மொழி பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய பிரதிநிதி சதீஸ், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி நாகராஜன், சுரேஷ், தலைமை கழக பேச்சாளர் ஆரல் செல்வகுமார் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.